இஸ்லாமிய நீதித்தீர்வுகள் - Orient Finance

islamic fincancing

ஓரியண்ட் ஆல்டர்நேட்டிவ் பைனான்ஸ் பிசினஸ் யூனிட், ஒரியன்ட் பைனான்ஸ் PLC இன் (OFPLC) பிரத்யேக வணிகப் பிரிவு 2021 இல் செயல்படத் தொடங்கியது. ஒரியன்ட் மாற்று நிதி வணிகப் பிரிவு இஸ்லாமிய நிதிச் சேவைகளை நடத்துவதற்கும் வைப்புத் தொகையைத் திரட்டுவதற்கும் இலங்கை மத்திய வங்கியால் உரிமம் பெற்றுள்ளது. வணிகத்திற்கான அதன் பிரத்யேக இஸ்லாமிய வங்கி முன்மொழிவு, வலுவான கொள்கைகள் மற்றும் மதிப்புகளால் வழிநடத்தப்படுவதோடு இன வேறுபாடின்றி அனைத்து சமூகங்களுக்கும் உரித்தான ஒன்றாகும். இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களுக்கு இணங்க அனைத்து தயாரிப்புகளும் சேவைகளும் கையாளப்படுவதை உறுதிசெய்யும் முயற்சியில் நாங்கள் ஒரு பிரத்யேகப் பிரிவை நிறுவினோம்.

அதன் தொடக்கத்திலிருந்தே, ஒரியன்ட் மாற்று நிதி வணிகப் பிரிவு ஒரு சுயாதீனமான ஷரியா ஆலோசகரை கொண்டிருப்பதன் மூலம் இஸ்லாமிய விழுமியங்களின் தொகுப்பிற்கு உட்பட்டுள்ளது. எங்கள் சுயாதீன ஷரியா ஆலோசகர், ஏற்றுக்கொள்ளப்பட்ட வணிக நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் வகாலா முதலீடுகளிலிருந்து சிறப்பாக நிதி திரட்டுவதை உறுதிசெய்கிறார்.

எமது ஷரியா ஆலோசகர் இஸ்லாமிய நிதி நிறுவனங்களுக்குள் விதிகள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்துவதிலும், தயாரிப்பு மேம்பாடு மற்றும் இஸ்லாமிய நிதி கட்டமைப்பு நுட்பங்களிலும் நன்கு கை தேறியவர் ஆவார். ஒரியன்ட் ஆல்டர்நேட்டிவ் பைனான்ஸ் பிசினஸ் யூனிட்டின் வழிகாட்டும் கொள்கைகள், பரிவர்த்தனை செய்யும் அனைத்து தரப்பினருக்கும் எல்லா நேரங்களிலும் நடைமுறை, நம்பிக்கை, நேர்மை மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவை பராமரிக்கப்படுவதை உறுதி செய்கிறது.

விசாரணைகள் / முறைப்பாடுகள் – Ifath@Orient.lk

 

ஒரியன்ட் மாற்று நிதி வணிகப் பிரிவின் வலிமை

  • அர்ப்பணிக்கப்பட்ட சுதந்திர ஷரியா ஆலோசகர்
  • முழு பயிற்சி பெற்ற மார்க்கெட்டிங் ஊழியர்கள்
  • வாடிக்கையாளர்களுக்காகவே உருவாக்கிய தயாரிப்புகள் மற்றும் சேவைகள்
  • பரந்த கிளை வலையமைப்பு
  • அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் தரநிலைகள்
  • தொந்தரவு இல்லாத செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள்

தயாரிப்புகள் மற்றும் சேவைகள்

அழைப்பைக் கோருங்கள்

படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்ளும்.

    service-form-banner-image
    Skip to content